சென்னையில் உள்ள Anna University வளாகத்தில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் Gnanavel Babu கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு அண்ணா பல்கலையில் மாணவி மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில், Gnanasekaran என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் மாணவி ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பேராசிரியர் ஞானவேல்பாபு தன்னையும், பல மாணவியரையும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பல்கலை நிர்வாகம் அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பொருளாதார சிக்கலில் இருக்கும் மாணவியருக்கு உதவி செய்வதாக கூறி, அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், மாணவர் அமைப்புகள் பல்கலை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பதுங்கியிருந்த ஞானவேல்பாபுவை சென்னை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் மீண்டும் “யார் அந்த சார்?” என்ற சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்து வருகின்றன.
