சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் Narendra Modi ஏப்.3ம் தேதி சென்னை வர உள்ளார். அதற்கு முன் அவர் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து அதே நாளில் சென்னை வருகிறார்.
ஏப்.4ம் தேதி சென்னையில் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், அதே நாளில் மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். அங்கு போட்டியிட உள்ள பாஜ வேட்பாளரை ஆதரித்து மக்களிடம் வாக்கு சேகரிப்பார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததுடன், தங்களது தொகுதிகளில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை பாஜவினரும் கூட்டணிக் கட்சியினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
