பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ தி லீடர்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, போதை கலாசாரத்திற்கு எதிராக தனது முதல் பொதுக்கூட்டத்தை ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலையின் ஆதரவாளரான விஷ்ணுபிரசாத் கூறுகையில், மாநில நலனை மையமாகக் கொண்டு ‘வீ தி லீடர்’ இயக்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன் முதல் முக்கிய நிகழ்வாக போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
