இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய எனது நண்பர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மோடி ஒரு மாபெரும் தலைவர். அவர் சிறந்த மனிதர் மட்டுமல்லாமல், வலிமையான, ஆரோக்கியமான மற்றும் அறிவார்ந்த நபரும் ஆவார்” என்று டிரம்ப் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து, “இனிவரும் ஆண்டுகளிலும் அவர் பல்வேறு மகத்தான சாதனைகளையும் வெற்றிகளையும் தொடர்ந்து பெறுவார் என நம்புகிறேன்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்
