N. Chandrababu Naidu தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார். பிரதமர் Narendra Modi விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை சுருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அண்மையில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, Andhra Pradesh முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பாதுகாப்பு அணிவகுப்பில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து வெறும் 4 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர், தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கும், சட்டப்பேரவை கூட்டத்திற்கும் சென்றபோது, அவருடன் வெறும் 4 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், Pawan Kalyanவும் தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
