Board of Control for Cricket in India, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியை அறிவித்துள்ளது.
Sri Lankaயில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா ஏ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணி பங்கேற்கின்றன. ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணியின் கேப்டனாக Tilak Varma நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக Riyan Parag செயல்பட உள்ளார்.
இந்த அணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் 15 வயதான இளம் வீரர் Vaibhav Suryavanshi. சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துவரும் அவருக்கு முதல்முறையாக இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு Indian Premier League தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 440 ரன்கள் எடுத்துள்ளார்.
அவருடன், Punjab Kings அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான Priyansh Arya மற்றும் Prabhsimran Singh ஆகியோரும் இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்:
Tilak Varma (கேப்டன்), Priyansh Arya, Vaibhav Suryavanshi, Riyan Parag (துணை கேப்டன்), Ayush Badoni, Nishant Sindhu, Harsh Dubey, Suryansh Shedge, Prabhsimran Singh (விக்கெட் கீப்பர்), Kumar Kushagra (விக்கெட் கீப்பர்), Vipraj Nigam, Yash Thakur, Yudhvir Singh, Anshul Kamboj, Arshad Khan.
