Donald Trump, “நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன்” என்று தெரிவித்துள்ளார்.
New Delhiயில் நடைபெற்ற அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், டிரம்ப் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் Marco Rubio மற்றும் S. Jaishankar உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய டிரம்ப், “இந்தியா எங்களை 100 சதவீதம் நம்பலாம். இந்தியாவுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்,” என்றார்.
மேலும், “அமெரிக்கா தற்போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும், வலுவான பங்குச்சந்தைகளும் எங்களிடம் உள்ளன. இந்தியா விரும்பும் அனைத்தும் அமெரிக்காவில் உள்ளது,” என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “நான் பிரதமர் Narendra Modiயின் மிகப்பெரிய ரசிகன். அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்திடுங்கள்,” எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
