தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளச் சிக்கனத்தை கருத்தில் கொண்டு மக்களிடம் ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் வளங்களை பாதுகாக்கவும், சுதேசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் முடியும் என அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி முன்வைத்த 7 கோரிக்கைகள் வருமாறு:
- சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து, அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
- சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
- ரசாயன உரங்களை சார்ந்து இருப்பதை குறைத்து, இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும்.
- வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
- ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, எரிசக்தி சிக்கனம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
