நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிறகு அதிமுகவில் பிளவு; இபிஎஸ் – வேலுமணி அணிகள் வெளிப்படை
சட்டசபை நம்பிக்கை ஓட்டெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டது கட்சிக்குள் பிளவை வெளிப்படுத்தியுள்ளது. வேலுமணி அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இபிஎஸ் அணியினர் எதிராக வாக்களித்தனர்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்து வாக்களித்தது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படையாக காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதில், Edappadi K. Palaniswami அணியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். மறுபுறம், S. P. Velumani அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் மூலம் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்றுள்ளது.
வேலுமணி அணியில் உள்ள எம்எல்ஏக்கள்
- S. P. Velumani – தொண்டாமுத்தூர்
- அரி – திருத்தணி
- காமராஜ் – நன்னிலம்
- இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம்
- சத்தியபாமா – தாராபுரம்
- மரகதம் குமரவேல் – மதுராந்தகம்
- மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிப்பட்டி
- லீமா ரோஸ் – லால்குடி
- சுகுமார் – ஆற்காடு
- கே.பி. அன்பழகன் – பாலக்கோடு
- சேகர் – ப.வேலூர்
- திலீபன் – சங்கரன்கோவில்
- நடராஜ் – காங்கேயம்
- விஸ்வநாதன் – நத்தம்
- மோகன் – பண்ருட்டி
- ரவி மனோகரன் – பழநி
- ராகேஷ் – சங்கராபுரம்
- M. R. Vijayabaskar – கரூர்
- கே.சி. வீரமணி – ஜோலார்பேட்டை
- ஜெயக்குமார் – பெருந்துறை
- ஹரிபாஸ்கர் – அந்தியூர்
- சி. விஜயபாஸ்கர் – விராலிமலை
- அருண்மொழி தேவன் – புவனகிரி
- C. V. Shanmugam – மயிலம்
- பாலகிருஷ்ணா ரெட்டி – ஓசூர்
இபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள்
- ராஜசேகர் – செய்யூர்
- வேலழகன் – அணைக்கட்டு
- கோவிந்தராசன் – பர்கூர்
- சம்பத்குமார் – அரூர்
- வேலு – செங்கம்
- ராமச்சந்திரன் – கீழ்பென்னாத்தூர்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி – கலசப்பாக்கம்
- ஜெயசுதா – ஆரணி
- முக்கூர் சுப்பிரமணியன் – செய்யாறு
- பழனிசாமி – திருக்கோயிலூர்
- நல்லதம்பி – கெங்கவல்லி
- ஜெயசங்கரன் – ஆத்தூர்
- உஷாராணி – ஏற்காடு
- மணி – ஓமலூர்
- வெங்கடாசலம் – மேட்டூர்
- Edappadi K. Palaniswami – எடப்பாடி
- வெற்றிவேல் – சங்ககிரி
- கருப்பணன் – பவானி
- தாமரை ராஜேந்திரன் – அரியலூர்
- ராஜேந்திரன் – நெய்வேலி
- ஓ.எஸ். மணியன் – வேதாரண்யம்
- தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி
இந்த அரசியல் மாற்றம் அதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
