திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ‘தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில்’ பேசிய அவர், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், தற்போதைய ஆட்சியிலும் ஹிந்து மத உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், சட்டசபை நடைமுறைகள், பள்ளிக் கல்வி தொடர்பான சில அறிவிப்புகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தனது கருத்துகளை முன்வைத்தார்.
போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.
