தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக JCD Prabhakar தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார்.
2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து, Vijay கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார்.
அவருடன் Anand, Aadhav Arjuna, Sengottaiyan உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சட்டசபையின் முதல் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார். பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 233 எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்.
இரண்டாவது நாளான நேற்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஆளும் தரப்பின் முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க. எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், துறையூர் தொகுதி எம்எல்ஏ ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin ஆகியோர், ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.
பின்னர், முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் Premalatha Vijayakanth, அதிமுக சார்பில் Edappadi K. Palaniswami மற்றும் S. P. Velumani உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் வாழ்த்து உரையாற்றினர்.
அனைத்து கட்சித் தலைவர்களும், “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் நிறைவடைந்தது. மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
