சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin பேசியதாக கூறப்படும் சனாதனம் தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, Rama Ravikumar அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சட்டசபையில் பேசிய உதயநிதி, ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது’ என்று கூறியுள்ளார். அனைவருக்கும் சமமான அரசு நடத்துவேன் என்று பதவியேற்ற முதல்வர் Vijay, இந்த பேச்சை கண்டிக்காமல் இருந்தது கேள்விகளை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சை முதல்வர் விஜய் ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், திராவிட மாடல் மற்றும் திருச்சபை மாடல் குறித்து விமர்சன கருத்துகளையும் அவர் பதிவிட்டுள்ளார். திமுக தலைமையில் குடும்ப வாரிசு அரசியல் நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“உதயநிதி தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால், சனாதன தர்மத்தின் பெருமை எந்தவிதத்திலும் குறையாது” என்றும் ராம ரவிக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
