தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்களில் சட்டவிரோதமாக பணம் வசூலித்தல், திருப்பணிகளில் முறைகேடு, வேலைவாய்ப்புக்காக லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட புகார்களை உரிய ஆதாரங்களுடன் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், பெறப்படும் ஒவ்வொரு புகாரும் தனது அலுவலகத்தின் மூலம் நேரடியாக பரிசீலிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, முறைகேடுகளை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
