ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக இந்திய ராணுவத்தை அமைதிப்படையாக அனுப்பும் யோசனையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக புதிய புத்தகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
‘Regime Change: Inside the Imperial Presidency of Donald Trump’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், உக்ரைனில் நேட்டோ படைகளுக்கு பதிலாக இந்தியா அல்லது சவுதி அரேபியாவின் ராணுவ வீரர்களை அமைதிப்படையாக அனுப்பலாம் என்று முன்மொழிந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்தியா இதுபோன்ற திட்டத்திற்கு ஒருபோதும் சம்மதிக்காது என்றும், அதற்காக செலவழிக்கவும் விரும்பாது என்றும் தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும், மோடி அமெரிக்கா வர விரும்புவதாகவும் டிரம்ப் கூறியதாக அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
