சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், தனது தலைமையிலான அரசும் அமைச்சர்களும் ஊழல் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று வலியுறுத்தினார். மக்கள் பணத்தை சுருட்டுவது, டெண்டர்களில் முறைகேடு செய்வது, பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்கு பணம் பெறுவது போன்ற செயல்கள் தங்களுக்கு தெரியாது என்றும், மக்கள் சேவையே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதே அரசின் நோக்கம் என்றும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்தும் அரசியல் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறினார். பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்தடை பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் புதிய மின்தடை நீக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விமர்சனங்களை வரவேற்பதாக கூறிய முதல்வர் விஜய், “இது மன்னராட்சி அல்ல; மனசாட்சியுள்ள மக்களாட்சி. கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு” என்று தெரிவித்தார்
