தன்னை குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற செயல்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என்றும், மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனது தொகுதியில் இல்லாத பிரச்னைகளை இருப்பது போல் கூறி அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதாக கூறினார். மேலும், தனது தனிப்பட்ட உதவியாளருக்கும் (பிஏ) அடிக்கடி அழைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
சிலர் தேவையற்ற காரணங்களுக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரத்தை வீணடிப்பதாகவும், இவை அனைத்தும் தனது பணியில் இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் மக்கள் நலப் பணியை நிறுத்தப் போவதில்லை என்றும், இதுகுறித்து இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
