கோவை: அவிநாசி தொகுதியில் மத்திய அமைச்சரும் பாஜ வேட்பாளருமான எல்.முருகன், மக்களுடன் நேரில் கலந்துரையாடி ஓட்டு சேகரித்து வருகிறார். மக்களின் வரவேற்பு வெற்றியை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அவிநாசி சட்டசபை தொகுதியில் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் எல்.முருகன், மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.
இன்று (ஏப்ரல் 15) அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அவிநாசி மக்களின் உற்சாகமான வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் தாமரைச் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது நடுவச்சேரி, கருக்கன்காடு, மாரப்பம்பாளையம் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜவின் தாமரைச் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
