தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஜூன் 4) புதிய கல்வியாண்டு தொடங்கியது. பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தக் கல்வியாண்டின் முதல் நாளை புதிய நம்பிக்கையுடன் தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் மிகப்பெரிய சக்தியாகும்.
உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தக் கனவுகளை நனவாக்க கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை உருவாக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று தெரிவித்துள்ளார்.
