K. Ponmudy சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை Madras High Court தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்களையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதுடன், அமைச்சரவைப் பதவியையும் இழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் Uma Anandan சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இளந்திரையன் வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
