P. Shanmugam, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, முதல்வரின் சிறப்பு பிரதிநிதி நியமனம் என்பது அவரின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என்றும், டெல்லியில் நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமித்திருப்பதில் பெரிய சர்ச்சை எதுவும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தை விரும்பிய மக்கள் தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்த அவர், ஆட்சி அதிகாரத்தை இழந்ததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று விமர்சித்தார்.
எம்எல்ஏக்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்கும் அரசியல் கலாச்சாரத்தை ஏற்க முடியாது என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக யார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “விரைவில் தேர்தல் வரும்” என்று M. K. Stalin முன்பு கூறியதன் பின்னணி தற்போது புரிகிறது என்றும், தவெக அரசை கவிழ்க்க திமுக முயற்சி செய்து வருவதாகவும் சண்முகம் குற்றம்சாட்டினார்
