கோவில்பட்டி:
“படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்குவேன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பல்வேறு கட்சிகள் வழங்கும் நிதி மற்றும் பொருள் வாக்குறுதிகளை மக்கள் எளிதில் நம்புவதாக கூறினார்.
டோக்கன், ₹8,000, ₹10,000, ₹2,000, ₹2,500, பிரிட்ஜ், தாலிக்கு ஒரு பவுன் தங்கம் போன்ற வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஆனால், நான் வீட்டுக்கு ஹெலிகாப்டர் தருகிறேன் அல்லது ஒவ்வொரு குடும்ப பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என சொன்னால் சிரிக்கிறார்கள் என்று அவர் விமர்சித்தார்.
ஆனால், அனைவருக்கும் அரசு வேலை வழங்குவேன் என திட்டமிட்டு கூறும் போது மக்கள் அதை நம்புவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில் ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது, பொருளாதாரம் எவ்வாறு மேம்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பேசுகிறேன். ஆனால், அதை மக்கள் ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.
வந்தவர்களையும், சென்றவர்களையும் மக்கள் நம்புகிறார்கள்; ஆனால் தங்களிடமிருந்தே எழுந்தவர்களை நம்புவதில்லை என்றும், அதுவே பிரச்னை என சீமான் தெரிவித்துள்ளார்.
