மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றநிலைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்க இஸ்ரேல் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனித்து மேற்கொள்ளும் என்றார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்காது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஈரானின் அணு அச்சுறுத்தலிலிருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துள்ளதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, சூழ்நிலை தேவைப்பட்டால் மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த அறிக்கை, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
