மதுரை: Tirupparankunram Hill தொடர்பான வழக்கில், மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழுவிற்கு வழிபாடு அனுமதி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில், மலை உச்சி தீபத்தூண் அருகே வழிபாடு நடத்த அனுமதி வழங்கியிருந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் மற்றும் மதுரை போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும், இதற்கு முன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு, 5 பேர் வழிபாடு அனுமதி உத்தரவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அதேபோல், திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
