சென்னை: தி.மு.க. கட்சி எங்களுக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சென்னை நகரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தற்போது பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தேவையான தகவல்களை தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் எந்தவித இழுபறியும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் தி.மு.க. தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த கெடும் விதிக்கப்படவில்லை என்றும், முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம் என்றும் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.
