அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் இந்திய பிரதமர் Narendra Modi ஆகியோருக்கிடையே மிகச் சிறந்த உறவு நிலவுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
United States வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் Karoline Leavitt, ஏஎன்ஐ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதை கூறினார்.
மேற்காசிய நாடான Iran மீது, கடந்த ஒரு மாதமாக Israel உடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் மோடியும் டிரம்பும் தொலைபேசியில் பேசி, தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், இந்தியாவுடனான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்றும், இரு தலைவர்களும் இணைந்து பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்தது என்றும், இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்றும் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
