நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை அடக்கிய விவகாரம் தொடர்பாக, முன்னாள் பிரதமர் K. P. Sharma Oli கைது செய்யப்பட்டுள்ளார்.
Nepal-இல் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இளைஞர்கள் பார்லிமென்டை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வன்முறையாக மாறியது.
இதன் போது போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு நாட்களில் 76 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அப்போது பிரதமராக இருந்த சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்து, அரசையும் கலைத்தார்.
போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்ததாக, சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக நீதிபதி கவுரி பகதூர் கார்கி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில், இன்று (மார்ச் 28) சர்மா ஒலியுடன் முன்னாள் உள்துறை அமைச்சர் Ramesh Lekhak கைது செய்யப்பட்டார்.
பக்தபூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து போலீசார் அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுதான் புதிய பிரதமராக Balen Shah பதவியேற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
