“சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது”: ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தற்போது மாண்புடன் நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர் கேள்விக்கு ஸ்டாலின் பதில்
சட்டசபையில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் என்ற முறையில், தற்போது சட்டசபை மாண்புடன் நடைபெறுவதாக கருதுகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “நீங்களே கேள்வி கேட்கிறீர்களே? மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது” என தெரிவித்தார்.
சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், ஸ்டாலினின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
