மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் இணைந்து குறுக்குவழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அவர் கூறுகையில், ஆட்சி அதிகாரம் மற்றும் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் சில அரசியல் தலைவர்கள் இணைந்து செயல்பட முயன்றதாகவும், அந்த முயற்சி வெற்றியடையவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், தற்போது வரை இதுபோன்ற முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நேர்மையான அரசியலை விரும்பும் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாகவும், அவர்களை கட்சியில் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் கட்சி செயல்பட்டு வருவதாகவும், புதியதாக இணையும் உறுப்பினர்களுக்கு உரிய பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
