சென்னை: தவெக தலைவர் Vijay, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, முதல்வர் M. K. Stalin மீது குற்றச்சாட்டு முன்வைத்தார்.
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கொடுங்கையூரில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். “ஒரு நல்ல காரியத்தை தொடங்கும்போது, நமக்கு பிடித்த இடத்திலிருந்து, நம்மை பெற்ற அம்மாவின் ஆசீர்வாதத்துடன் தொடங்க வேண்டும் என்பதால் தான் பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறேன்” என்று அவர் கூறினார்.
பெரம்பூர் தொகுதியில் உள்ள லூர்து அன்னை சர்ச், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் மசூதிகளை குறிப்பிட்ட அவர், உழைப்பின் வாசம் உள்ள பகுதி என்பதால் இங்கு பிரசாரம் தொடங்கியதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் குறித்து அவர் கவலை வெளியிட்டார். “தமிழகத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சி. ஒன்றுக்கும் உதவாத ஆட்சியை நடத்தி வரும் ஸ்டாலின் சார் விரைவில் விடைபெறப் போகிறார்” என்று விமர்சித்தார்.
மேலும், “இந்த 5 ஆண்டுகளில் ஆட்சி நடத்தினார்களா? அடிப்படை வசதிகளே இல்லாத நிலை. பெண்கள் இரவில் வெளியே செல்ல கூட பயப்படுகின்றனர். பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் உள்ளது” எனக் கூறினார்.
டாஸ்மாக் மற்றும் நகராட்சித் துறையில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வேலைவாய்ப்பு இல்லாமை மற்றும் லஞ்சம் குறித்து விமர்சித்தார்.
“ஏப்.23ம் தேதி ஓட்டுச்சாவடிக்கு சென்று விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்” என மக்களிடம் அவர் வாக்கு கோரினார்
