வாஷிங்டன்: ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காத நாடுகளுக்கு இனி உதவி செய்யப்படமாட்டாது என அமெரிக்க அதிபர் Donald Trump கடுமையாக தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான Iran மீது அமெரிக்கா மற்றும் Israel மேற்கொண்ட போர் 32வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், ஜலசந்தியை திறக்க ராணுவ உதவி வழங்குமாறு உலக நாடுகளிடம் அமெரிக்கா முன்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், எந்த நாடும் முன்வராததால் அமெரிக்கா விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட டிரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பல நாடுகள் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சந்திக்கின்றன. எங்களுக்கு உதவாத நாடுகளுக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன – அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்குங்கள் அல்லது ஈரானை எதிர்த்து போராடி பெற்றுக்கொள்ளுங்கள்,” என கூறியுள்ளார்.
மேலும், “எங்களுக்கு ஆதரவு வழங்காத நாடுகளுக்கு இனி அமெரிக்கா உதவி செய்யாது. தங்களுக்குத் தேவையான வளங்களை தாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும்,” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டிலும், உலகளாவிய அழுத்தங்களாலும், இந்த போரில் இருந்து விலகும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
