காட்பாடி: தேர்தல் பிரசாரத்தின் போது, வி.சி.க. நிர்வாகியை பிரசார வேனில் இருந்து இறங்குமாறு கூறிய சம்பவம், அமைச்சர் Durai Murugan மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன், பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, வி.சி.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலர் பிலிப் பிரசார வேனில் ஏறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, “வேனில் ஏறாதே, கீழே இறங்கு” என்று துரைமுருகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வி.சி.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வி.சி.க. நிர்வாகிகள் தெரிவித்ததாவது: “முந்தைய தேர்தல்களில், சில பகுதிகளில் பிரசாரம் செய்யும்போது எங்கள் கட்சியின் கொடி அகற்றப்பட்டதுடன், சுவர் விளம்பரங்களில் கூட எங்கள் தலைவர் பெயர் இடம்பெறவில்லை. தற்போது வேனிலிருந்து இறங்குமாறு கூறியிருப்பது கட்சியை அவமதிப்பதாக உள்ளது,” என குற்றம்சாட்டினர்.
இதற்கு விளக்கம் அளித்த வி.சி.க. மாவட்ட செயலர் பிலிப், “அமைச்சர் துரைமுருகன் யதேச்சையாக கூறியிருக்கலாம். இருந்தாலும், இந்த சம்பவம் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
