தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவும் வெளியிடப்பட்டது.
அதன்படி, தேர்தல் கமிஷன் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. அவினாஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த Azra Garg புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
