புதுடில்லி: உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய நிதி உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று லோக்சபா கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை முன்வைத்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் லோக்சபாவில் 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகளவில் ஏற்படும் பொருளாதார சவால்கள் மற்றும் போர் சூழ்நிலைகளால் உருவாகும் நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய பொருளாதார நிதி உருவாக்கப்படும்.
மேலும் 2025–26 ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளை தாண்டி அரசின் செலவினங்களில் எந்தவித அதிகரிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
