சென்னை: அ.தி.மு.க பொதுச்செயலர் Edappadi K. Palaniswami, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்டதாகவும், மக்களின் ஆதரவை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
“வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது; கண்ணீர் மட்டும் வரும். அதுபோல திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் ஆராய்ந்தால், உள்ளே எதுவும் இல்லை. மக்களின் கண்ணீர், வேதனை மட்டுமே மிஞ்சும்” என்று அவர் கூறினார்.
மேலும், தனது ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க செயல்படுத்திய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், தற்போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை காப்பியடித்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
“மக்களுக்கு ஸ்டிக்கர் ஆட்சியா, இல்லையா ஒரிஜினல் ஆட்சியா என்பது தேர்தலில் தீர்மானிக்கப்படும்” எனவும், தேர்தல் நாளை மறக்காமல் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
