ஈரான் தாக்குதல் எதிரொலி; அமெரிக்கர்களுக்கு ரூ.3.4 லட்சம் கோடி கூடுதல் செலவு
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வால், அமெரிக்கர்கள் ரூ.3.4 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக செலவிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் United States மற்றும் Israel இணைந்து Iran மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களின் மீதும் தாக்குதல் நடத்தியது.
இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததோடு, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது. பின்னர் சில நாடுகளின் தலையீட்டால் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்காவின் Brown University இந்த போர் காரணமாக அமெரிக்கர்கள் எரிபொருளுக்காக மேற்கொண்ட கூடுதல் செலவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின் படி, போரின் தாக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை ஒரு கேலனுக்கு 4.50 டாலர் வரை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, பிப்ரவரி மாதம் முதல் மே 17 வரை அமெரிக்க நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மொத்தம் 41.5 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.4 லட்சம் கோடி கூடுதலாக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக 316 டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,400 வரை கூடுதலாக செலவழித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த கூடுதல் செலவு, அமெரிக்க அரசு சாலை கட்டுமானத்திற்காக செலவிட்ட தொகையை விட அதிகம் என்றும், முன்னாள் அதிபர் Joe Biden அறிவித்த மின்சார வாகன நிதியுதவி திட்டச் செலவையும் மிஞ்சுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
