ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காகவும் நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் லெபனான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உலகின் சுதந்திர ஜனநாயக நாடுகளுக்கு எதிரான ஒரு பெரிய அச்சுறுத்தலை இஸ்ரேல் எதிர்கொண்டு வருவதாக கூறினார்.
உலகம் முழுவதும் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தவும், பயங்கரவாத வலையமைப்புகளை பரப்பவும் முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகவே இஸ்ரேல் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக நடைபெறும் இந்த நடவடிக்கை, இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னை மட்டுமல்ல என்றும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நலன்களுடனும் தொடர்புடையது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.
மேலும், Hezbollah அமைப்பு லெபனான் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாகவும், லெபனான் பகுதியை ஏவுகணை தாக்குதல்களுக்கான தளமாக மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் Donald Trump உடன் இணைந்து, ஹெஸ்பொல்லாவை நிராயுதபாணியாக்குவது மற்றும் லெபனானை ராணுவமற்ற பகுதியாக மாற்றுவது என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும் நெதன்யாகு கூறினார்.
