அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பின்னடைவு: எலான் மஸ்க் கிண்டல் பதிவு!
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஜனநாயகக் கட்சி 54 இடங்களையும், குடியரசுக் கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 224 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 134 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மேலும், டிரம்ப்பின் நம்பிக்கைக்குரிய குடியரசுக் கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் கிண்டல் பதிவு
டிரம்ப்பின் கட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்கத் தேர்தல் நிலவரம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்த முறை தேர்தலில் தலையிடுவதற்காக நான் பயன்படுத்திய விண்வெளி லேசர்கள் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
2024 தேர்தல் குறித்த சர்ச்சை
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பைப் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்தப் பின்னணியில், தற்போதைய தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு எலான் மஸ்க் வெளியிட்டுள்ள கிண்டல் பதிவு கவனம் பெற்றுள்ளது.
