தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026 பணிகள், முதல் முறையாக டிஜிட்டல் மற்றும் சுய கணக்கெடுப்பு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான சுய பதிவு (Self Enumeration) ஜூலை 17 முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
- https://se.census.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.
- மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தேர்வு செய்து, கேப்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்.
- குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.
- விருப்பமான மொழியைத் தேர்வு செய்யவும்.
- மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவு செய்து உறுதிப்படுத்தவும்.
- மாவட்டம் மற்றும் தேவையான இருப்பிட விவரங்களைத் தேர்வு செய்யவும்.
- வரைபடத்தில் (Map) உங்கள் வீட்டு இருப்பிடத்தை குறித்துச் சேமிக்கவும்.
- பின்னர் வரும் 34 கேள்விகளுக்கு தேவையான தகவல்களை நிரப்பவும்.
- அனைத்து தகவல்களையும் சரிபார்த்து சமர்ப்பித்த பிறகு, 11/12 இலக்க அடையாள எண் உருவாக்கப்படும். அந்த எண் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் அனுப்பப்படும்.
முக்கிய தகவல்கள்
- ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும்.
- குடும்பத் தலைவர் அல்லது தலைவி சார்பாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மற்றொரு குடும்பம் பயன்படுத்த முடியாது.
- குடும்பத் தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது.
- இணையதளத்தில் FAQ, உதவி மற்றும் தவறவிட்ட தகவல்களை நினைவூட்டும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
- கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, வழங்கப்பட்ட அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும்.
