இந்தியா–போலந்து கூட்டு பொருளாதார ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேச செல்வாக்கை பாராட்டி முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி உலகளவில் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர் என்றும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்டகால நட்புறவு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி தெரிவிக்கும் கருத்துகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவனமாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்ட அவர், ரஷ்யா–உக்ரைன் போரின் முக்கியமான கட்டத்தில் மோடியின் செல்வாக்கு வெளிப்பட்டதாக தெரிவித்தார்.
அதன்படி, 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானபோது, பிரதமர் மோடி அதிபர் புடினுடன் பேசியதன் மூலம் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டதாக டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறினார்.
