பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாமில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பலுச் விடுதலை ராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. காவல்படை முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும், தாக்குதல் தொடர்பான 43 விநாடிகள் கொண்ட வீடியோவையும் பலுச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ளது.
