சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக மற்றும் தவெக எம்எல்ஏக்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் தன்னை தாக்க வருவது போல் கையை ஓங்கியதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார்.
அவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக எம்எல்ஏக்கள் ஒருமையில் பேசுவதாகவும், ‘வாடா’, ‘போடா’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இதுபோன்ற பேச்சுகள் சட்டசபை மரபுகளுக்கு எதிரானவை என்றும், அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் தங்களை நோக்கி கையை ஓங்கியதாகவும், அடிக்க வருவது போல் நடந்து கொண்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
தவெக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை திமுக எம்எல்ஏக்கள் ஒருமையில் பேசுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தவெக உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் விஜயின் ஒரு பார்வை போதுமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவை விதிகளுக்கு உட்பட்டு சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என துணை சபாநாயகர் தெரிவித்தார்.
