உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசி நிமிடங்களில் அர்ஜென்டினா வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி (0-0) சமநிலையில் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என்ற முன்னிலையை பெற்றுத் தந்தார்.
இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா, 85-வது நிமிடத்தில் சமநிலை கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என மாற்றியது.
போட்டி கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் (90+2) நட்சத்திர வீரர் லவுடாரோ மார்டினெஸ் அபாரமான கோல் அடித்து அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேற, அர்ஜென்டினா ரசிகர்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால், இந்த பைனல் போட்டி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
