மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக, அமித் ஷா திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் நடைபெறும் காவல்துறை விருது வழங்கும் விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ளார். புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 9) நடைபெறும் நிகழ்ச்சியில், புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விருதை அவர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தரிசனத்தை முடித்த பின்னர், அமித் ஷா புதுச்சேரி செல்ல உள்ளார்.
