பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து கைகுலுக்கினார். இரு தலைவர்களும் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அருகில் இருந்தார்.
இம்மாத இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்குமாறு ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஷி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டில்லி புறப்பட்டுச் சென்றார்.
