ஈரானுடன் அண்மையில் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை விரிவுபடுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், “ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் இன்னும் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும். நான் போதும் என்று கூறும் வரை அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
