புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர், டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டு வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மும்பை போலீசார் உடனடியாக இந்த தகவலை டெல்லி போலீசாருக்கு தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த மிரட்டல் தகவல் வதந்தியாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மிரட்டல் விடுத்த மர்மநபரை அடையாளம் காணும் பணியில் டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
