சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் சட்டவிரோத பண வசூல், திருப்பணிகளில் முறைகேடு, வேலைவாய்ப்புகளில் லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து உரிய ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களுடன் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு புகார்கள் அனுப்புமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு பெறப்படும் புகார்களை தானும், தனது அலுவலகமும் நேரடியாக பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
