கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள D. K. Shivakumar தலைமையிலான புதிய நிர்வாகத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டிகே சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகத்தில் பல்வேறு உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல துறைகளின் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், முதல்வரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி Rajendra Cholan நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், 2008ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர்.
முன்னதாக டிகே சிவகுமார் கர்நாடக துணை முதல்வராக இருந்தபோதும், அவரது செயலாளராக ராஜேந்திர சோழன் பணியாற்றியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள சிவகுமார் மீண்டும் அவரையே தனது செயலாளராக நியமித்துள்ளார்.
இதனுடன், கர்நாடக மின்கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பும் ராஜேந்திர சோழனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராக Tushar Girinath நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
