பெங்களூரு: கர்நாடக முதல்வர் Siddaramaiah தனது பதவியை துணை முதல்வர் D. K. Shivakumarக்கு விட்டுக்கொடுக்க ஒப்புதல் அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் முதல்வர் பதவியை மையமாக கொண்டு நீண்ட காலமாக நிலவி வரும் சித்தராமையா – சிவகுமார் இடையேயான அதிகாரப் போட்டிக்கு தீர்வு காணும் நோக்கில், காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்திருந்தது.
இதையடுத்து, இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக டில்லி சென்றனர். அங்கு நடைபெற்ற ஆலோசனையில் Mallikarjun Kharge, K. C. Venugopal மற்றும் Randeep Singh Surjewala உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, Rahul Gandhi தனியாக சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, “நீங்கள் நீண்ட காலமாக முதல்வராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். தேசிய அரசியலிலும் உங்கள் அனுபவம் தேவைப்படுகிறது. முதல்வர் பதவியை விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பதுடன், உங்கள் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்” என்று ராகுல் காந்தி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இதற்கு சித்தராமையா தயக்கம் காட்டியதாகவும், பின்னர் ஒருவழியாக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த சிவகுமார் சிரித்த முகத்துடன் காணப்பட்ட நிலையில், சித்தராமையா அமைதியாக இருந்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கர்நாடகத்தில் இருந்து ராஜ்யசபா மற்றும் மேல்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசனை நடந்ததாக காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இருப்பினும், கர்நாடக முதல்வர் பதவி விவகாரத்தில் விரைவில் முக்கிய முடிவு வெளியாகலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
