புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. Rahul Gandhi மீது பாஜ கடும் விமர்சனம் செய்துள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை சரியானதே என்றும், அதை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் Supreme Court of India சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பேசிய Sudhanshu Trivedi, “சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் மூலம் எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக அவதூறு பரப்பிய ராகுல் காந்தியின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் திறமையின்மையை மறைக்க ஜனநாயக அமைப்புகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“தேர்தல் சமயங்களில் கூட அவர்கள் தீவிரமாக பணியாற்றுவதில்லை. பின்னர் வெளியே வந்து அபத்தமான அறிக்கைகள் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்த காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என சுப்ரீம்கோர்ட் நிரூபித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் மற்றும் அரசியல் அணுகுமுறைகளை விமர்சித்த அவர், “அவர்களின் ஒப்பந்தங்கள் சீனாவுடன் தொடர்புடையவை; சித்தாந்தம் ஐரோப்பாவுடன் தொடர்புடையது” என்றும் தெரிவித்துள்ளார்.
